சென்னை: ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதலமைச்சராக வர முடியாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த சில மாதங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில்,ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதலமைச்சராக வர முடியாது என்று தெரிவித்து உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியிடம் தான் ஓ.பன்னீர்செல்வத்தை விட வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கான காரணம் இருக்கும் எனக் கூறினார்.
அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதால் மக்களுக்கு ஆட்சி மீது இயல்பாகவே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தன்னால் கண்கூடாக பார்க்க முடிவதாகவும், ஜெயலலிதாவே இருந்திருந்தால் கூட வரும் தேர்தலில் அவரால் முதலமைச்சராக வர முடியாது என்பது தான் யதார்த்தம் என்றார். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று கூறியவர், ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் என்ன எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால் என்ன அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என என்றும், அதிமுகவில் இப்போது ஏற்பட்ட குழப்பமே தேவையற்ற குழப்பம் என தெரிவித்தவர், இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் நிச்சயம் இருக்கும் எனக் கூறிய திருநாவுக்கரசர், நடக்காத ஒரு நிகழ்வுக்கு கற்பனை செய்துகொண்டும் கனவில் மிதந்துகொண்டும் போட்டியிட்டு வருவதாக விமர்சித்தார்.