டில்லி

ரு ஓட்டலில் குறிப்பிட்ட ஒரு அறையில் அல்லது பகுதியில் மட்டும் ஏசி இருந்தாலும் அங்கு விற்கப்பட்டும் அனைத்து உணவுவகைகளுக்கும் 18% ஜி எஸ் டி வசூலிக்கப்பட வேண்டும் என அரசு கூறி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் ஜி எஸ் டி வரி நாடெங்கும் அமுலாக்கப்பட்டது.   அதன் படி குளிரூட்டப்பட்ட அனைத்து உணவகங்களுக்கும் 18% ஜி எஸ் டி எனவும் குளிரூட்டப்படாத உணவகங்களுக்கு 12% ஜி எஸ் டி எனவும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவக வாடிக்கையாளர்கள் சில சந்தேகங்கள் எழுப்பினார்கள்.   அதற்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில் சொல்லப்பட்டதாவது :

ஒரு உணவகத்தில் ஒரு அறையிலோ அல்லது ஒரு பகுதியில் மட்டுமோ ஏசி வசதி செய்யப்பட்டிருந்தாலும் அந்த உணவகத்தில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 18% வரி விதிக்கப்படும்.   அந்த உணவு ஏசி இல்லாத பகுதியில் பரிமாறப்பட்டாலும்,   அல்லது பார்சலாக எடுத்துச் செல்லப்பட்டாலும் 18% வரிதான் விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.