சென்னை: சாதாரண மழைகளுக்கே தண்ணீர் தேங்கி சென்னை நகர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், இனிமேல் 20 செ.மீ மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என்றவர் 24மணி நேரத்திற்குள் தண்ணீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றுங்மட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேயர்ஆர். பிரியா தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46, குட்ஷெட் சாலையில் உள்ள இரயில்வே குளத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-37, வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் விளையாட்டுக்கூடம் கட்டிட கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் வி. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்), ம.பிரதிவிராஜ், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), தண்டையார்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னன்ர செய்தியாளர்களிடம் பேசிய மேயர் கூறியதாவது, பருவ மழை தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் எந்தெந்த இடங்கள் தாழ்வான பகுதிகள் என்பதை கண்டறிந்து அங்கு 100 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் 3 வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 15-ம் தேதிக்கு பிறகு எந்த பகுதியிலும் ரோடுகளை ‘கட்’ செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
சென்னை மாநகரம் கடற்கரைக்கு அருகில் உள்ள நகரமாகும். பல இடங்கள் திட்டமிடப்படாமல் உருவான பகுதியாகும். எனவே பருவ மழையின்போது 15 செ.மீ. முதல் 20 சென்டி மீட்டருக்கு உட்பட்ட மழையை தாங்கக்கூடிய சூழல் மாநகராட்சியிடம் உள்ளது. அதற்கான கட்டமைப்பு எல்லாம் மழைநீர் வடிகால் மூலம் மேம்படுத்தி இருக்கிறோம். 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தால் இயற்கை கொடுக்ககூடிய மழை சூழலாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இதற்கு முன்னால் தண்ணீர் நிற்கும் சூழல் இருந்தால் 7 நாள், 8 நாள் தண்ணீரை வெளியேற்ற கால அவகாசம் தேவைப்படும். ஆனால் இப்போது உள்ள கட்டமைப்புகளில் 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறோம். சாலைகளில் தண்ணீர் தேங்காது.
இவ்வாறு கூறினார்.