டில்லி

ரோப்பாவில் குடி புகுவோரை திரும்ப அனுப்பாவிட்டால் ஆப்பிரிக்க அல்லது இஸ்லாம் நாடாக மாறும் அபாயம் உள்ளதாக தலாய்லாமா எச்சரித்துள்ளார்.

பிழைப்புக்காக  பல நாட்டினர் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து குடி புகுந்து வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

திபெத்திய புத்தர்களின் தலைவரான தலாய் லாமா அரசியல் காரணங்களுக்காக கடந்த 1959 ஆம் வருடம் வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இங்கிலாந்து செய்தி ஊடகத்துக்கு தலாய்லாமா பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர், “ஐரோப்பிய நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பலர் அகதிகளாக வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கர்களும் இஸ்லாமியர்களும் பெருமளவில் வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்வது ஒரு தவறான விவகாரமாகும். அதே நேரத்தில் அவர்களை ஏற்காமல் விடுவதும் முறையானது இல்லை.

எனவே அவர்களை வரவேற்று அவர்களுடைய திறமைக்கு ஏற்ப பயிற்சிகளை அளித்து மீண்டும் அவரவர் நாட்டுக்கு திரும்ப அனுப்புவதே சிறந்ததாகும். அதை விடுது அவர்க்ளை நாட்டில் வைத்துக் கொள்வது நாட்டின் தனித்தன்மையை பாதிக்கும். ஒரு சிலர் என்றால் அந்த பாதிப்பு இருக்காது. ஆனால் ஐரோப்பா முழுவதும் அகதிகள் தங்கினால் விரைவில் இது ஒரு ஆப்ரிக்க அல்லது இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. அது மிகவும் தவறானது” என தெரிவித்துள்ளர்.