யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி.
55 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய போட்டி ஒன்றில் பட்டம் வெல்லும் கனவுடன் தனது சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்துக்குத் தோல்வியே மிஞ்சியது.
அரையிறுதிப் போட்டியில் ஜெர்மன் அணியை வீழ்த்தியதும் ஜெர்மன் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
ஜெர்மன் கோல்கீப்பர் மீது எல்.இ.டி. லைட் அடித்து கேலி செய்தனர். அதோடு நில்லாமல் ஜெர்மன் அணி தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத சிறுமியை இன அடிப்படையில் வெறுப்புணர்வு பதிவு வெளியிட்டனர்.
இதற்கெல்லாம் சேர்த்து நேற்று நடந்த இறுதியாட்டத்தில் கோப்பையை தவறவிட்ட இங்கிலாந்து அணியை சமூகவலைதளத்தில் வெச்சி செய்தனர் நெட்டிசன்கள்.
அணியில் பிற இனத்தைச் சேர்ந்த மூவரை வைத்து விளையாடும் இங்கிலாந்து இனவெறியைத் தூண்டும் விதமாக பதிவிட்டதால் அவர்களே இவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டனர் என்று பதிவிட்டுள்ளனர்.