யூரோ கோப்பை கால்பந்து போட்டி கோலாகல துவக்கம்

Must read

 

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூரோ கோப்பை போட்டியின் தொடக்க விழா ரோம் நகரின் ஒலிம்பிக்கா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது.

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. போட்டி தள்ளிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பிறகு இப்போது தொடங்கி இருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து மிகவும் பிரபலமான போட்டி யூரோ கோப்பை கால்பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

லீக் சுற்று ஆட்டத்தில் 24 அணிகள் 6 குழுக்களாக பிரிந்து விளையாட இருக்கிறது. 2016 ம் ஆண்டு போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

துவக்கவிழாவை காண 16 ஆயிரம் ரசிகர்கள் கால்பந்தாட்ட மைதானத்தில் திரண்டனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க 24 நான்கு அணிகளைக் குறிக்கும் வகையில் ஹீலியம் பந்துகள் மைதானத்தில் பறக்கவிடப்பட்டன.

பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் காணொளிக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

இத்தாலி – துருக்கி அணிகளுக்கு இடையே நடந்த துவக்க ஆட்டத்தில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.

பதினோரு நாடுகளில் உள்ள 11 நகரங்களில் நடக்க இருக்கும் இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 12 ம் தேதி நடைபெற இருக்கிறது.

More articles

Latest article