யூரோ கோப்பை கால்பந்து : ஸ்காட்லாந்து அணியை 2 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது செக். குடியரசு

Must read

 

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் செக். குடியரசு அணியை எதிர்கொண்டது ஸ்காட்லாந்து.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறும் இந்த போட்டி ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி முடியும் நேரத்தில் 42 நிமிடத்தில் செக். குடியரசின் ஷிக் முதல் கோல் போட்டார்.

இடைவேளைக்கு பிறகு ஆட்டம் துவங்கிய 7 வது நிமிடத்தில் (52 வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்தார் ஷிக்.

இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது செக். குடியரசு.

More articles

Latest article