யூரோ கோப்பை 2016 நேற்று இரவு போட்டிகள் குரூப் எஃப் போட்டிகள் ஆஸ்திரியா – ஹங்கேரி மற்றும் ஐஸ்லாந்து – போர்ச்சுகல் நாடுகளுக்கு இடைய நடைபெற்றது.
ஆஸ்திரியா – ஹங்கேரி  போட்டி பிரெஞ்சு நகரமான போர்டோவில் நடைபெற்றது. இந்த வருடம் யூரோ கோப்பையை ஆஸ்திரியா அணி வெல்லும் என கருதப்பட்டது ஆனால் நேற்று ஹங்கேரி அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரியா அணியை வென்றனர் . ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரியா வலுவான ஆட்டம் அடியது ஆனால் இரண்டம் பாதியில் ஸ்ழலை (Szalai) 61வது நிமிடத்தில் மற்றும் ஸ்டீபர் (Stiber) 86வது நிமிடத்தில் ஹங்கேரி அணிக்கு கோல் அடித்தனர். இரு அணிகள் மோதிய 138வது போட்டி இது.
FotorCreated
ஐஸ்லாந்து – போர்ச்சுகல் போட்டி பிரெஞ்சு நகரமான செயிண்ட் எட்டினியில் நடைபெற்றது. இந்த போட்டியை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி . 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து இந்த ஆண்டு யூரோ 2016யில் தகுதி பெற மிகச்சிறிய நாடு என்ற பெறுமையை பெறுகிறது. ஐஸ்லாந்து அணி முக்கியமான தொடர் ஒன்றில் ஆடுவது இதுவே முதல் முறை. இந்த போட்டில் போர்ச்சுகல் அணியில் உலகில் முன்னணி வீரர் ரொனால்டோ தலைமையில் விளையாட ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்தனர். நானி 31 நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கோல் அடித்தார் . ஐஸ்லாந்து அணியின் ஜர்ந்சன் 50வது நிமிடத்தில் கோல் அடித்தார் இதன் மூலன் ஆட்டம் சமமன் ஆனது.
FotorCreated1
ரொனால்டோவுக்குக் கிடைத்த 2 ஃப்ரீ கிக் வாய்ப்புகளிலும் கூட கோல் அடிக்க முடியவில்லை. ஐஸ்லாந்து தற்காப்பு முறையில் விளையாடினார், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.