‘என் வழி தனி வழி’ என்றார் ரஜினி.
கொரோனா வைரஸ் குறித்து ,தவறான கருத்து தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றார், ரஜினி.
ரஜினி வழியில் மோகன்லாலும், கொரோனா குறித்து மனதுக்கு தோன்றியதை தெரிவித்து, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
இப்போது, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முறை.
‘’ மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணி. நிறைந்த அமாவாசை நாள்.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், துஷ்ட சக்திகளின் ஆட்டம் உச்சம் அடையும் நாள்.அப்போது கை தட்டி அதிர்வுகளை ஏற்படுத்தினால், இந்த வைரஸ் வீரியம் இழந்து விடும்’’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமிலும் அதே கருத்தை வழி மொழிந்திருந்தார்.
’ தப்பான தகவல்களை பரப்புகிறீர்கள்’’ என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளிக்க-
இரண்டு பதிவுகளையும் உடனடியாக நீக்கி விட்டு முடங்கி கொண்டார், அமிதாப்.
‘’அமிதாப்பச்சனின் வலைத்தளங்களை ஏராளமானோர் பின் பற்றுகிறார்கள். அவரது தவறான கருத்து ஆபத்தானது’’ என்று மக்கள் கோபம் கொப்பளிக்கிறார்கள்.