இந்தியாவின் பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள், எத்தியோப்பியா நாட்டில் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. எத்தியோப்பியர்களும், இந்தியர் களைப் போல பாரம்பரிய மிக்க நவதானிய உணவுகள், சமோசோ, ஆப்பம், பருப்பு வகைகள் கொண்ட உணவுகளை அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர். இது அந்நாட்டு மக்களின் அரவணைப்பு மற்றும் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதுமட்டுமின்றி, எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில், இன்றுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிள் பெரும்பாலும் “நமஸ்தே, நமஸ்தே!” என்று வரவேற்கப்படுகிறார்கள்.
நமஸ்தே என்ற வார்த்தை இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் அந்த வார்த்தையைக் கொண்டுதான் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எத்தியோப்பியாவில், இந்திய உணவுகள், கலாச்சாரம் பரவி இருப்பதில் வியப்பேதும் இல்லையே…
எத்தியோப்பிய உணவு மற்றும் இந்திய உணவு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வரலாறு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் அதிக விரும்பும், சம்புசா மற்றும் சமோசா, இன்ஜெரா மற்றும் ஆப்பம், மிசிர் வோட் மற்றும் பருப்பு போன்ற தானிய பாரம்பரியம் மிக்க உணவுகள் போன்றவை இந்தியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே நடைபெற்று வந்த சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தகம்தான் என்று கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த வர்த்தகமே, இரண்டு பண்டைய கலாச்சாரங்களின் உணவு வகைகளை வடிவமைத் துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சம்புசா என்பது சமோசா போன்றது. இன்ஜெர என்பது ஆப்பம் மாதிரி. மிசிர் வோட் என்பது பருப்பு போன்றது. சிக் வெத் சனா தால் என்பது பருப்பு வகைகளால் தயாரிக்கப்படும் உணவு . கிக் அலிச்சா என்பது மாதர் கி டால் போன்றது. Niter kibbeh – நெய் போன்ற ஒரு மசாலா, தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் – செழுமையை அளிக்கிறது. இன்ஜெரா மற்றும் ஆப்பம் செய்யும் கட்டங்கள் கூட ஒரே மாதிரியானவை. இதுபோன்ற உணவு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
எத்தியோப்பியா மற்ற மாநிலங்களுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்த நாட்டின் உணவு வகைகள் பெரும்பாலும் இந்திய உணவு வகைகளேய ஒத்துப்போகின்றனர். எத்தியோப்பியா இந்தியா உள்பட மற்ற மக்களின் மரபுகளையும் படிப்படியாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடே அங்கும் இந்திய பாரம்பரிய உணவுகளுக்கு இன்றளவும் மவுசு உள்ளது.
எத்தியோப்பியன் உணவு வகைகளில் அதிக அளவு காய்கறிகள் சேர்க்கப்படுவது இல்லை. பலர் இதை ஆரோக்கியமற்றதாக கருதுகின்றனர். ஆனால், அவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த நவதானியங்கள், மற்றும் மாநிச உணவுகளை அதிக அளவில், எடுத்துக்கொளகின்றனர். இதனால், எத்தியோப்பியர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 58 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 63 ஆண்டுகள் மட்டுமே என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது,
ஆயினும்கூட, பலர் காய்கறிகளைக் கொண்டு பல்வேறு உணவுகளை சமைக்கிறார்கள், இந்தியாவின் பிரபலமான இட்லி, தோசை வகைகளும், டால் வகைகளும், எத்தியோப்பியர்களுக்கு பிடித்தமான உணவாக கருதப்படுகிறது,. ஒரு காலத்தில் இந்திய உணவை ருசித்த எத்தியோப்பிய மக்கள் இன்றளவும், அவற்றை காதலிக்கிறார்கள் என்தே உண்மை.
எத்தியோப்பியன் உணவு மற்றும் கஃபே உணவகத்தில், சிவப்பு பருப்பு (மைசூர் பருப்பு), நவதானிய வகைகள், பருப்பு வகைகள், துண்டு துண்தாக வெட்டப் பட்ட ஜலபீனோஸ், பீட், சாலட், காலார்ட் கீரைகள், உருளைக்கிழங்கு மற்றும் கேரட், அஜிஃபா, உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டுடன் முட்டைக்கோஸ், கேரட்டுடன் பச்சை பீன்ஸ், பிளவுபட்ட பட்டாணி, மற்றும் இன்ஜெரா கூடையுடன் பரிமாறப்படும் தக்காளி மற்றும் வெங்காயம் நிரப்பப்பட்ட ஜலபீனோ , சில்வர் ஸ்பிரிங், போன்ற பல பாரம்பரிய உணவுகள், வழங்கப்படுகிறது.
இதுபோன்ற உணவு வகைகள், இந்தியாவில் இருந்து எத்தியோப்பியாவிற்கு மடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது இரு நாடுகளுக்கு இடைய நடைபெற்று வந்த பண்டைய கால வணிகங்களே, இன்று எத்தியோப்பியாவில் இந்திய உணவுகள் வெகுவாக ருசிக்கப்படுவதற்கு காரணமாக கருதப்படுகிறது. எத்தியோப்பியன் உணவுகளுக்கு சுற்றுலா பயணிகளிடையே தனி மவுசு உண்டு. தெற்காசியர்கள் எத்தியோப்பியன் உணவைப் பற்றி கவித்துவமாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை மறுக்க முடியாது.
எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் “நமஸ்தே, நமஸ்தே!” என்று வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் பரபரப்பான மெர்கடோ வழியாக நடக்கும்போது. எத்தியோப்பிய குழந்தைகள் ஷாருக்கையும் சல்மான் கானையும் எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.
ஹிந்த் அடிஸ் பார் மற்றும் பார்டாப் சிக்கன் ஷாப் போன்ற பெயர்களுடன் இரண்டு டஜன் இந்திய உணவகங்களையும் அடிஸ் அபாபா கொண்டுள்ளது. இங்குள்ள உணவகங்களில், வழங்கப்படும் உணவுகள் மிகவும் ருசியானது. அதன் ருசியை விவரிக்க முடியாது என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கினற்ன.
இந்தியாவுக்கு 2,600 மைல்களுக்கு அப்பால் உள்ள இரு வேறுபட்ட நாடுகளும், இந்தியாவின் பாரம்பயரிஉ ணவுகளையும், பாலிவுட் நடிகர்களின் மீதான அன்பமையும் பார்க்கும்போது, இரு நாடுகளுக்கான பிணைப்பை என்னவென்று சொல்வது…
இந்தியனும், தமிழனும் பல நாடுகளக்கு கடல்தாண்டிச் சென்று வணிகம் செய்ததன் தாக்கம், இன்றளவும் பல நாடுகளில் இந்திய கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும், உணவுகளுக்கும் வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாத என்பதே உண்டு.