ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். 6சுற்று நிலவரப்படி சுமார் 40ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளரை விட சுமார் 30ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். இதனால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் , ஈரோடு “இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.  நான் வெற்றிபெறுவேன் என்பது இது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும். இந்த வெற்றி நமது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றவர், திமுகவின்  20 மாத ஆட்சி காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும் என்றார்.

மதச்சார்பற்ற கூட்டணியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இந்த வெற்றி காட்டுகிறது/ வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என்றவர்,  ஏற்கனவே தனது மகன் தொடங்கிய பணிகளை முடிப்பேன் என்றார். மேலும், ஈரோடு மக்களுக்கு செய்ய வேண்டியதை அமைச்சர் முத்துசாமி உடன் இணைந்து செய்வேன்” என தெரிவித்ததுடன்,

.