சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 7ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் களத்தில் தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்மே பிரதான தேர்தல் களத்தில் உள்ளன. எதிர்க்கட்சிகள் முழுமையாக தேர்தலை புறக்கணித்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களுடன் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையில், தேர்தல் பரிசீலனையின்போது குளறுபடி ஏற்பட்டது. கர்நாடகாவில் ஓட்டு உள்ள பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு முதலில் ஏற்கப்பட்டது. பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. 20ந்தி அன்று நள்ளிரவு நேரம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டு உள்ளார். அவர்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அவரை மாற்றம் செய்து தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடத்துள்ளார்.
அவருக்கு பதிலாக தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.