ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 75 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான நேரமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  கடந்த 4ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.  6-வது நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். நேற்று வரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் உள்பட மேலும் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்மூலம், கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், இதுவரை  75 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்,

நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன,

10ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறலாம் – அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

இதைத்தொடர்ந்து, வரும் 27ந்தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ந்தேதியும் நடைபெற உள்ளது.