பத்திரிகை.காம் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு
தல சிறப்பு:
கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.
பொது தகவல்:
தினசரி காலை, உச்சிகாலம், மாலை ஆக மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு பண்டார இனத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக முறையாக பூஜை செய்து வருகின்றனர்.
தலபெருமை:
கோயிலின் வடக்கு பக்கமாக சென்றால் அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் முன்பகுதியில் விநாயகர், நாகர் சிலைகள் உள்ளன. தெற்கு பக்கத்தில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. அதன் பக்கத்தில் உள்ள புற்றுக்கண்ணை வழிபட்டு மேற்கு நோக்கி மண் பாதையில் சென்றால் இரும்புகளால் ஆன வேல்கள் பூமியில் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் பகுதியில் தூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.<BR><BR>தூரியின் இடது புறம் இரண்டு குதிரைகள் சுதையும், இரண்டு முனியப்பசுவாமி சுதையும் வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மேடான பகுதியில் மூலஸ்தான கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்கள் சன்னதி உள்ளது. கருப்பண்ணசாமி மூர்த்தம் வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடக்கில் மர நிழலில் சர்ப்ப தேவதை மூர்த்தங்கள் உள்ளன. சிறிது தூரம் சென்றால் கிழக்கு பார்த்த விநாயகர் சன்னதி உள்ளது. இதனை வலம் வந்தால் பசுமையான மரங்களின் நடுவில் முருகன் சன்னதியை காணலாம். முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.
தல வரலாறு:
ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர்.
பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.