சென்னை: ஈரோடு இடைத்தேர்தல்…”திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி” என்றவர், இது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட் டம் என்று முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பிரமாண்டமாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி தேர்தல் முடிவுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த ஆதரவே ஈரோடு இடைத் தேர்தல் வெற்றி என்று கூறியவர், நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாகஅமையும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வெற்றிக்கு அயராத உழைத்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியை சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை முடிவு என்றார்.
திமுக ஆட்சியை மக்கள் சரியாக எடைபோட்டு சிறப்பான வெற்றியை அளித்துள்ளதாக கூறியவர், திமுக கூட்டணிக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இந்த தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர் என்றவர், தன்னையே மறந்து நாலாந்தர பேச்சாளர்போல நடந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, இந்த இடைத்தேர்தல் முடிவு ஒரு பாடம் என்றார்.