டில்லி:

ரிக்சன் நிறுவனத்திடம் அனில் அம்பானி,  தனது  நிறுவனத்துக்காக தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியது தொடர்பான வழக்கில்  அனின் அம்பானி குற்றவாளி என உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், எரிக்சன் நிறுவனத்துக்கு  4 வாரத்தில் நிலுவை தொகை 453 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும். இல்லயெனில் 3 மாதம் சிறை தண்டனை  என்றும் உச்சநீதிமன்றம் கூறி  உள்ளது.

மேலும்,  நீதிமன்ற அவமதிப்பிற்காக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகை  4 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

னில் அம்பானியைத் தலைவராகக் கொண்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்புக் கருவிகள் வாங்கியதற்காக எரிக்சன் நிறுவனத் துக்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியுள்ளது.  இதில் முதல் தவணையாக 550கோடி ரூபாயை 4மாதக் காலத்துக்குள் செலுத்துமாறு 2018மே 30ந்தேதிநாள் உச்சநீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பணம் செலுத்தாமல் டிமிக்கி  கொடுத்து வந்தது. இதையடுத்து எரிக்சன் நிறுவனம்,   ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி, அதிகாரிகள் சதீஷ் சேத், சாயா விரானி ஆகிய மூவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து. மேலும்,  இவர்கள்  நாட்டைவிட்டு வெளியேறாமல் இருக்க உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறும் கோரியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கடந்த  விசாரணைக்கு வந்தபோது 118கோடி ரூபாயை நீதிமன்றப் பதிவாளரிடம் செலுத்த ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு அனில் அம்பானி உள்ளிட்ட மூவரும் 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.