டில்லி:

விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முக்கிய வழக்கமான ஓபிஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கின் இறுதிவிசாரணை முடிந்ததும் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு பலமுறை விசாரணை பட்டியலில் இடம்பெற்றும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத வகையில், திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இது வழக்கறிஞர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் வழக்கின் விசாரணை தள்ளிப்போவ தாக குற்றம் சாட்டப்பபட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கறிஞர்கள்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியுடம் முறையிட்டனர்.

இதை அறிந்த தலைநீதிபதி ரஞ்சன் கோகாய் அதிர்ச்சி அடைந்தார். இது பெரும் அபத்தமான செயல் என்றார்.  இதுகுறித்து தான் நீதிமன்ற பதிவாளரிடம் காரணம் கேட்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே சில வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதி உத்தரவு இல்லாமல் பதிவிட முடியாது என்று பதிவாளர்கள் கூறியிருப்பதாகவும், அதுபோல வழக்கு சம்பந்த மாக,  குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவு காரணமாக சில பட்டியலிடப்பட்ட வழக்குகள் தோராயமாக மற்றும் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் கவனத்தில்கொண்டு விசாரிக்க முயற்சி செய்யும் என்றும் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.