சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு,   அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன், சமத்துநாள் உறுதி மொழி ஏற்றார். பின்னர்  பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரத திருவுருவப் படத்துக்கு மலர்தூவி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் ரூ. 44 கோடியே 50 லட்சத்தில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவா்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.