சென்னை,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இன்று மாலை டில்லி செல்கிறார்கள்.
இரு அணிகளும் இணைய டில்லியில் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை நடைபெற இருக்கும் துணைஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கு பெறுகிறார்கள்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் சசிகலா அணி இரண்டாக உடைந்து, எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே மோதல் முற்றிவரும் நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் அணி விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஓபிஎஸ் – இபிஎஸ் இருவர்களையும் தனது கைக்குள் வைத்துள்ள மோடி, இரு அணியினரும் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து இன்று மாலை அவர் டில்லி செல்கிறார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும் இன்று டில்லி இருக்கிறார். டில்லியில் இருவரும் இடையே மோடி சமரசம் செய்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றா வெங்கய்யா நாயுடு நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் எடப்பாடி. அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு வலக்கு அளிப்பது தொடர்பாக மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.