அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கூக்லெர். இவர் கப்பலில் பணிபுரிகின்றார். திருமணமாகாத இவரின் ஒரேத் தோழன் இவர்  பாசமுடன் வளர்த்த 9 வயது சாக்லேட் நிற லேப்ரடார் வகை நாயான பெல்லா . பெல்லாவிற்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ளன. போதாக்காலமாக பெல்லாவிற்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கியது.
bella7
கடந்த செப்டம்பரில், கால்நடை மருத்துவர்கள் பெல்லா 3 முதல் 6 மாதத்திற்குள் இறந்துவிடுமென கைவிரித்துவிட்டனர். கப்பலில் வேலை பார்க்கும் ராபர்ட் கூக்லெருக்கு தான் பணியிலிருந்து வீட்டிற்கு செல்கையில் நாய் உயிருடன் இல்லை எனும் செய்தியைத் தாங்கிக் கொள்ளும் சக்தி தன்னிடமில்லை எனத் தோன்றியது. எனவே, அந்நாயின் இறுதிநாட்களை அதனுடன் சந்தோசமாகக் கழிக்க எண்ணினார்.
bella6
எனவே தனது உற்றத் தோழனான பெல்லாவை தன்னுடைய காரில் கூட்டிக்கொண்டு நாடு முழுவதும் சுற்றிக் காண்பிக்கக் கிளம்பினார். கடந்த நவம்பரில் சிக்காகோவில் உள்ள மெரைன் கார்ப்ஸ் பாலில் துவங்கிய இந்த ஜோடியின் பயணம், நயாகரா முதல் அடிரோண்டக் மலை வரை தொடர்ந்தது.
bella5
இருவரும், டெட்ரோய்ட், கென்டக்கி, ஓகியோ, நயாகரா வீழ்ச்சி, அருங்காட்சியகம், நியூயார்க்கில் உள்ள அடிரோண்டக் மலை என எதையும் விட்டுவைக்கவில்லை.
பயணம் முழுவதிலும் நண்பர்கள் வீட்டில் அல்லது காரிலேயே உறங்கியுள்ளனர்.
கூக்லெர் தனது பயண  அனுபவத்தை டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நாயுடன் தான் எடுத்த படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
 
மூன்று கால்களைக் மட்டுமே உடைய பெல்லா கூக்லெருடன் சளைக்காமல் ட்ரெக்கிங் எனப்படும் மலையெறுதலையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்பொழுது இந்த ஜோடி ஃப்ளோரிடாவில் உbella3ள்ள தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ளது.
தற்பொழுது கோடைவெயிலின் தாக்கத்தை பெல்லாவால் தாங்கமுடியாததால் நெப்ராஸ்கா திரும்பிவிட கூக்லெர் முடிவெடுத்துள்ளார்.
bella2
எல்லோஸ்டோன் மற்றும் யோஸ்மைட் தேசியப் பூங்காவிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் கூக்லெர்.
 
“தொடர்ச்சியாய் பயணத் திட்டம் போடுவது, தனது உற்ற நண்பனான பெல்லாவுடன் பொழுதைக் கழித்திட உதவியாயிருப்பதாக கூக்லெர் சி.என்.என்-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.bella