டில்லி:
போலியாக தயாரிக்க முடியாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘எலெக்ட்ரானிக் சிப்’ பொருத்தப்பட்ட, இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதை எளிமைப்படுத்தும் நோக்கில், “பாஸ்போர்ட் பெற பிறப்புச்சான்றிதழ் இணைக்கத் தேவையில்லை “ என்பது உட்பட பல விதிமுறைகளை தளர்த்தி டிசம்பர் 23-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. சாமியார்கள், ஆதரவற்ற குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோர் பாஸ்போர்ட் எளிதாகப் பெறவும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு குறைத்துள்ளது.

 


அதோடு, அதிநவீன ‘சிப்’ பொருத்தப்பட்ட, மின்னணு முறையில் பாஸ்போர்ட்டையும் அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு.
இந்த இ-பாஸ்போர்ட்டில் சிறிய சிப் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், பாஸ்போர்ட்டில் வழக்கமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக பயோ-மெட்ரிக் பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதால், தகவல்களை திருடி எவரும் போலியாக தயாரிக்க முடியாது.
இந்த இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary

Passports with RFID chip to be issued soon. Tamper proof passport to be issued  with biometric data of passport holder. Epassport