நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

இ பாஸ்.. கதறுகிறது குறுதொழில் துறை..

சாவு, கல்யாணம் மருத்துவசிகிச்சை போன்றவற் றிற்காக இ பாஸ்கிடைக்காமல் மக்கள்படும் அவதிப்பற்றி சொல்லிச்சொல்லி நமக்கே சலித்துவிட்டது.

அவைகளையும் தாண்டி பொருளாதாரம் பல்வேறு துறைகளை குரல்வளையை நெறித்துவருகிறது என்பதெல்லாம் மூளை மழுங்கிப்போன தமிழஅரசுக்கு தெரியப்போவதில்லை. பத்திரிகை செய்திகளை படிக்க படிக்க பகீர் என்கிறது.

தமிகத்திற்குள்ளேயே பல மாவட்டங்களில் இடம் பெயர்ந்துவிட்ட தொழிலாளர்களை மறுபடியும் அழைத்துவரமுடியாமல் பலரும் தவிக்கின்றனர்,

ஒருபக்கம் தொழிலார்கள் இல்லாததால் பழையபடி உற்பத்தியையோ வியாபாரத்தையோ முழுமை யாக செய்யமுடியாமல் இழப்பு. இன்னொருபக்கம் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்.

தமிழ்நாடு குடிசை மற்றும் குறுதொழில் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் சொல்கிறார்..’’ வெளி மாவட்டங்களுக்கு சென்று ஆர்டர் பெறுவது, சரக்குகளை கணக்கெடுப்பது, பணம் வசூல் செய்வது போன்றவற்றை இ பாஸ் சிக்கலால் செய்யவேமுடி வதில்லை. கலெக்டர் அலுவலகங்களில் காத்திருந்து காத்திருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி இ பாஸ் விண்ணப்பங்களை நிராகரித்துவிடுகின்றனர்’’

சென்னை அம்பத்தூரில் சிறுதொழில் செய்யும் எஸ்.மணிகண்டன் கூறுவதை கேளுங்கள்.’ ஆரம்பத்தில் இ பாஸ்கொடுத்தார்கள், அதை நம்பி நிறையபேர் விண்ணப்பித்ததும் மேற்கொண்டு வழிதெரியாமல் மொத்தமாய் நிற்கிறது. அமைச்சர்கள் திரும்ப திரும்ப இ பாஸ் திட்டம் தொடரும் என்று சொல்வதை பார்த்தால் இப்போ தைக்கு சிக்கல் முடிவுக்கு வராது போலிருக்கிறது’’ என்று ஆதங்கப்படுகிறார்.

நாம் மறுபடியம் சொல்கிறோம், முறைப்படி உரிய காரணங்களுக்காக இ பாஸ் கேட்பவர்களுக்கு தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. ஆனால் இ பாஸுடன் வாகன ஏற்பாடு செய்யப்படும் என்று பகிங்கரமாக டிராவல் ஏஜென்சிகள் விளம் பரம் செய்கிறார்கள். பச்சை கொள்ளைக்கு பகிரங்க விளம்பரம்,, எவ்வளவு கேவலமான நிலைமை இது..

இதையெல்லாம் பார்த்தால் தெளிவாக தெரிகிறது, ஒரு புறம் இ பாஸ் கொள்ளையர்கள் காட்டில் அடைமழை, இன்னொரு பக்கம் மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்கள் மாவட்டத்திற்குள் கொரோனா புள்ளிவிவரங்களை துரத்துவதை தவிர தொழில்துறை உற்பத்தி பற்றியோ தங்களின் அலட்சியத்தால் மாநில முழுக்க ஏற்பட்டுவரும் பாதிப்புகளை பற்றியோ அக்கறையே இல்லை என்பது..
மாவட்ட எல்லைகளை பிரித்துக்கொண்டு சுல்தான் களை போல செயல்படும் ஆட்சியர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு மாநில அளவில் ஒட்டு மொத்தமாக நடக்கும் சேதாரத்தைபற்றி கவலையேபடாமல் இ பாஸ் கவிதை பாடிக்கொண் டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் தமிழக அரசு-.