மாமல்லபுரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், ஒரு குறிப்பிட்டக் காரணத்திற்காக, மாமல்லபுரத்தில் நடைபெறும் மோடி – ஜி ஜிங்பிங் சந்திப்பை வரவேற்கிறார்கள்.

மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரு வறண்ட(கிட்டத்தட்ட) ஏரியை, ஊரை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக புனரமைப்பு செய்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற வழக்கம் தவறிய ஒரு வித்தியாசமான சந்திப்பையடுத்து, தற்போதும் அதுபோன்றதொரு சந்திப்பு இரு தலைவர்களுக்குமிடையே நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில் புனரமைக்கப்பட்ட ஏரியின் பெயர் கோனேரி. அதாவது ‘பசு ஏரி’ என்று பெயர். தொலைவிலிருந்துப் பார்த்தால், ஒரு பசு அமர்ந்திருப்பது போன்று தெரிவதால், அப்பெயர் சூட்டப்பட்டதாம்.

கிருஷ்ணாவின் வெண்ணைய் பந்து என்ற பாறைக்கு அருகில் அமைந்திருந்தாலும், இந்த ஏரியின் அவல நிலையால், இங்கே சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்வதில்லை. இந்த ஏரியைப் புனரமைக்கும் பணியை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு, தற்போது அந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது.