சென்னை,
மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபிறகு நாட்டில் பணப்புழக்கம் கடும் தட்டுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது.
அத்துடன் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், வங்கியில் சேமிக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பணமில்லா பரிவர்த்தனை செய்யும்படி பொது மக்களை மத்தியஅரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், தற்போது பெரும்பாலான தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கவும், பரிவர்த்தனை செய்யவும் பணம் பிடிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.
மத்தியஅரசு பணமில்லா பரிவர்த்தனை செய்ய ஊக்குவிக்கும் வேளையில் வங்கிகள் பண பரிவர்த்தனைக்கு பணம் பிடிப்பேன் என்று அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான மக்கள், வங்களில் உள்ள தங்களது சேமிப்பு கணக்குகளை மூடி வருகிறார்கள். அதற்கு பதிலாக சேமிப்பு கணக்கு தொடங்க தற்போது தபால் நிலையங்களை நாடி வருகின்றனர்.
மத்திய அரசு நிறுவனமான தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க குறைந்த பட்சமாக ரூ.20 மட்டும் போதுமானது. மேலும் குறைந்த பட்ச சேமிப்பு தொகை ரூ.50 மட்டும் நமது கணக்கில் வரவு வைத்தாலே போதுமானது. ஏடிஎம் வசதி பயன்படுத்தி இலவசமாக வரம்பின்றி பணம் எடுக்கலாம்:
தபால் அலுவலக கணக்குகளுக்கும், வங்கி கணக்குகள் போலவே இணையதள வங்கி வசதி, ஏடிஎம் வசதி, செக் புக் வசதி, மொபைல் ஆப் சேவை போன்றவற்றைப் பயன்படுத்த முடியும்.
என்னென்ன வசதிகள்?
குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.50 மட்டுமே
செக்புக் உபயோகம் தேவைப்படின் இருப்புத்தொகை ரூ.500
ஏற்கனவே சாதரான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் செக்புக் தேவைப்பட்டால் ரூ. 500 செலுத்தி செக்புக் வசதி பெறலாம்.
தபால் நிலையம் சேமிப்புக் கணக்குகளில் பணத்தைச் சேமித்து வரும்போது ஆண்டுக்கு 4 சதவீதம் இருப்புத் தொகைக்கு வட்டி அளிக்கப்படும்.
அந்த வட்டி தொகைக்கு 10,000 ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.
நாம் எந்த ஒரு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் அதனைப் பிற கிளைகளுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
ஒரு தபால் நிலையத்தில் ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
அதிக கணக்குகள் தேவைப்படின் மற்ற தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்துக்கொள்ளலாம்.
குறைந்த பட்ச வயது வரம்பு 10 மட்டுமே.
மைனர் குழந்தைகளே தங்களது சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கும் வசதி உண்டு.
ஜாயின்ட் அக்கவுண்டு திறக்கும் வசதியும் உண்டு
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதள வங்கி சேவை உண்டு.
இதன் மூலம் வங்கி கணக்குகள் மூலம் எப்படி நெட்பேங்கிங் உபயோகப்படுத்தி பண பரிவர்த்தனை செய்கிறோமோ அதே வசதிகளை தபால் அலுவலக சேமிப்பு கணக்கிலும் பெறும் வசதி.
ஏடிஎம் தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு வசதி.
இந்த கார்டு மூலம் எந்த வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் எடுக்கலாம். இதற்கு பரிவர்த்தனை கட்டணம் கிடையாது.
சேமிப்பு கணக்குகளுக்கு வங்கி போன்றே ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கைத் திறக்க குறைந்தது 20 ரூபாய் போதுமானது.
தொடர்ந்து 3 ஆண்டுகள் உபயோகப்படுத்தாவிட்டால், கணக்கு தானாகவே குளோஸ் ஆகிவிடும்.
அருமையான சேவை… பொதுமக்களே கொள்ளைக்கார வங்கிகளிடம் இருந்து தங்களை விடுவித்து, தபால் அலுவலக சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்…