போராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்!

Must read

சென்னை,

ல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‛ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே, இறுதியில் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசால் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முதல் கட்ட நடவடிக்கையாக எடுத்து கொண்டு, சட்டரீதியாகவும், பார்லிமென்ட் மூலமாகவும் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிகளை துவக்குவோம். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவே, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

பிரதமர், முதல்வரை நம்புங்கள்:

சுமூகமான தீர்வை ஏற்படுத்த நமது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களை நாம் நம்ப வேண்டும். நாளை, அலங்காநல்லூரில் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்புவோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவியுங்கள். புதிய பிரச்னைகள் ஏதும்வேண்டும். காளைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். ஒரு பிரச்னை ஏற்பட்டால், விலங்குகள் நல அமைப்புகள் அதை கோர்ட்டுக்கு எடுத்த செல்ல தயாராக உள்ளனர்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நாம் அமைதியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்ட ரீதியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிப்போம்.

இதற்காக, பிரதமர், மூன்று மத்திய அமைச்சர்கள், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள்பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அளித்துள்ள வாக்குறுதியை நம்புவோம்.

மாணவர்களும், மக்களும் போராட முன்வராவிட்டால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது. இந்த சூழ்நிலையில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்.

அதன் பிறகு சிறிது ஓய்வு எடுத்து விட்டு, இது குறித்து சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் நெல்லையில் ஆலோசனை நடத்துவோம்.

மாணவர்களை வணங்குகிறேன்: போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவின், கல்லூரியின் பிற அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் காணுங்கள்.

நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். அர்த்தமுள்ள தீர்வுகளை, அரசியல் சட்டப்படி தான் ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டங்களும் அந்த வகையில் தான் இருக்க வேண்டும்.

இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட காரணமாக இருந்த மாணவர்களை வணங்குகிறேன்.

இந்த போராட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கடந்த மாதம் மாற்றப்பட்டு விட்டார்.

விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்ற புதிய வாரியம் இன்னும் இரண்டு மாதங்களில் செயல்பட துவங்கும். மேலும், பீட்டா அமைப்பின் நிதி மோசடி குறித்து விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம்.

முறையான புகார்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்உறுதி அளித்துள்ளார். விரைவில் அந்த புகார் மனு வெளியிடப்படும்.

அதை அனைத்து தரப்பினரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article