சென்னை: அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களுக்காக ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை” எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

‘தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய வகுப்புகளில் சேர்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணாக்கர்கள் உயர்படிப்புக்கு சேரும் வகையில்  14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் இருந்து மாறி, அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்காக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.