அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸை 112 ரன்களுக்கு இழந்துள்ளது. அக்ஸார் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. ஆனால், அந்த அணி நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. துவக்க வீரர் ஜாக் கிராலே அரைசதம் அடித்தது மட்டும்தான் ஒரே ஆறுதல்.

மற்றபடி, ஜோ ரூட், பென் போக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இருவர் டக்அவுட். மற்ற 4 பேட்ஸ்மென்களும் ஒற்றை இலக்க ரன்களே!

மொத்தம் 10 விக்கெட்டுகளில், 9 விக்கெட்டுகள் சுழல் பந்துவீச்சிற்கே கிடைத்தன. அக்ஸாருக்கு 6 விக்கெட்டுகளும், அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகளும் கிடைக்க, இஷாந்த் 1 விக்கெட் எடுத்தார்.

இங்கிலாந்து அணி மொத்தமாக 50 ஓவர்கள்கூட தாக்குப்பிடிக்கவில்லை. 48.4 ஓவர்களிலேயே, அனைத்தையும் இழந்து 112 ரன்களை எடுத்தது.

 

 

[youtube-feed feed=1]