அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணியின் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. வெறும் 98 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டது அந்த அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 30 ரன்களுக்குள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அதன்பிறகு சற்று நிலைத்து நின்று ஆடி, கூடுதலாக 40 ரன்கள் வரை சேர்த்தது.

ஆனால், அதன்பிறகுதான் நிலைமையே சுத்தமாக மாறிப்போனது. அக்ஸார் மற்றும் அஸ்வின் சுழலில் அடுத்தடுத்து காலியானார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள்.

அரைசதம் அடித்து ஆடிவந்த துவக்கவீரர் ஜாக் கிராலேவை 53 ரன்களுக்கு காலி செய்தார் அக்ஸார். ஜோ ரூட் 17 ரன்களுக்கு அஸ்வினால் திருப்பி அனுப்பப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கெல்லாம் காலி. ஓலி போப் 1 ரன்னுக்கும், ஆர்ச்சர் 11 ரன்களுக்கும், ஜேக் லீச் 3 ரன்களுக்கும் அவுட்டாக, 98 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டது இங்கிலாந்து.

இந்தியா தரப்பில், இதுவரை அக்ஸார் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.