சென்னை: முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எட்டியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 60 ரன்கள‍ைத் தாண்டும்வரை, விக்கெட் எதுவும் இழக்காமல் நிதானமாக ஆடிவந்தது. ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

60 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆடிவந்த ஜோசப் பர்ன்ஸை அவுட்டாக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன்பிறகு களமிறங்கிய டான் லாரன்ஸை, எல்பிடபிள்யூ முறையில் டக்அவுட் ஆக்கினார் பும்ரா.

இதனால், 60 ரன்களைத் தாண்டுகையில் எந்த விக்கெட்டும் இழக்காதிருந்த இங்கிலாந்து அணி, 67 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.