ண்டன்

ங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 75 வயதாகும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசுக்கு  ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே அவர் லண்டனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளைக்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது அவரது அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அதே மருத்துவமனையில் நடந்து வருகின்றன. மன்னர் எத்தனை நாட்கள் மருத்துவமனையில்  இருப்பார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை

கடந்த வாரம்  சார்லசின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நேற்று காலை மருத்துவமனையில் உள்ள கேத்தை மார் சார்லஸ் இதே மருத்துவமனைக்கு சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது.