இங்கிலாந்து கால்பந்து ரசிகர் சாம் அஸ்டலே டென்மார்க் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருந்தார்.

போட்டியன்று ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது எலும்பு மஜ்ஜையை தானம் செய்யவேண்டி இருந்ததால், அன்று அவர் மருத்துவமனையில் இருந்தார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது, இதனை மருத்துமனையில் இருந்தபடி டி.வி.யில் பார்த்து ரசித்த சாம், ஒரு நல்ல போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பை இழந்ததாக கூறிய நண்பர்களுக்கு, ஒரு உயிரை காப்பாற்றுவதை விட வேறு எதுவும் எனக்கு பெரிய மகிழ்ச்சி இல்லை என்று கூறினார்.

இவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் கேரி லினெகர் “இவருக்கு ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியைக் காண டிக்கெட் பெற்றுத் தரவேண்டும்” என்று கோரிக்கை பதிவிட்டார்.

சமூகவலைதளப் பதிவைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கப்பெற்ற சாம், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிவருவதாகவும் இறுதிப் போட்டியைக் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.