லண்டன்: லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளைத் மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வாரம் தொடங்கினர். தடுப்பு மருந்து மூலம் நோய்த்தடுப்பு செய்யப்படும் நபர்களின் குழுவை உள்ளடக்கிய இந்த ஆய்வில், மனிதர்கள்  முதல் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பக்க விளைவுகள் இல்லாத, கோவிட் -19 க்கு எதிராக ஒரு சிறந்த நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்.

“கோவிட் -19 தொற்றுநோய் ஆயிரக்கணக்கான உயிர்களைக் பலிவாங்கி, அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக, மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பாதுகாப்பதற்கும், அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பப் பெற உதவுவதற்கும் ஒரு சாத்தியமான தடுப்பு மருந்து மிக முக்கியமானதாக இருக்கும்.”என்று இம்பீரியலில் உள்ள தொற்று நோய் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறினார்.

“ஒரு விஞ்ஞானரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்போமானால்,  புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய முன் அனுபவமில்லாத இந்நேரத்தில், ஒரு சாத்தியமான தடுப்பு மருந்தைக் கண்டறியும் ஆய்வுகளை மிகவும் விரைவாக நிறைவு செய்ய முடிந்தது மிகவும் அசாத்தியமான ஒன்று என்பதாகும். புதிதாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி, சில மாதங்களுக்குள் மனித சோதனைகள் வரை கொண்டு செல்ல முடிந்துள்ளது – இதைப்போன்றதொரு ஆய்வுத் திட்டம் வேறு அந்த ஒரு தடுப்பு மருந்துக்கும் இதற்கு முன் செய்யப்படவில்லை.

“எங்கள் அணுகுமுறை வெற்றியடைந்து, தடுப்பு மருந்து கோவிட்-19 நோய்க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கினால், எதிர்காலத்தில் இதுபோன்ற தீவிர, உலகளாவிய நோய்தொற்றுக்கு நாம் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார். பாதுகாப்பு தரவு கிடைத்தவுடன், ஆய்வாளர்கள்  கண்டுபிடிப்புகளின் ஆய்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இது ஒரு சாத்தியமான தடுப்பு மருந்தாக இருக்கக்கூடும் என்று நம்புகிறோம். மேலும், அது 2021 ஆம் ஆண்டின் முற்பாதியில் இருந்து பயன்பாட்டுக்கு கிடைக்கத் தொடங்கலாம். தடுப்பு மருந்து கடுமையான முன் மருத்துவ பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும்,  விலங்குகளில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் இது மிகவும் பாதுகாப்பானது என்றும், நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு  ஊக்கமளிக்கும் அறிகுறிகளை உருவாக்கியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

41 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்து அரசாங்க நிதியுதவி மற்றும் மேலும் 5 மில்லியன் பவுண்டுகள் நன்கொடைகளின் வாயிலாக பெறப்பட்டு இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய எண்ணிக்கையில்  தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும்  RNA தொழில்நுட்பத்தின் முதல் சோதனையாக இருக்கும். மேலும், இது தடுப்பு மருந்து வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும். மேலும், வளர்ந்து வரும் நோய்களுக்கு சிறந்த தடுப்பு மற்றும் கட்டுபடுத்தும் செயல்பாடாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

“இம்பீரியல் கல்லூரி தடுப்பு மருந்தின் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றம் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் புத்தி கூர்மை மற்றும் உறுதியான தன்மைக்கு சான்றாகும். இந்த சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்தத் தடுப்பு மருந்து கொரோனா வைரஸை சமாளிக்க மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவுள்ள நோய்களையும் சமாளிக்க உதவும்” என்று இங்கிலாந்து வர்த்தக செயலாளர் அலோக் சர்மா கூறினார் .

வரவிருக்கும் வாரங்களில், 300 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தைப் பெறுவார்கள். இந்த ஆய்வில், தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் மனிதர்களில் நம்பிக்கைக்குரிய நோயெதிர்ப்பு சக்தியைக் உருவாகுவது நிரூபிக்கப்பட்டால், அந்தக் கட்ட ஆய்வு முடிவுகளை சோதிக்க மற்றும் பெரிய அளவிலான மூன்றாம் கட்ட  சோதனைகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 6,000 ஆரோக்கியமான தன்னார்வலர்களுடன் தொடங்க திட்டமிடப்படும்.

இறுதியில், மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்த தடுப்பு மருந்து கோவிட் -19 க்கு எதிராக இங்கிலாந்திலும் உலகெங்கிலும் மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இம்பீரியல் தொற்று நோய் துறையைச் சேர்ந்த டாக்டர் கத்ரீனா பொல்லாக் மற்றும் ஆய்வின் தலைமை ஆய்வாளர் கூறும்போது, “எந்தவொரு புதிய தடுப்பு மருந்தின் பாதுகாப்பையும் நிரூபிப்பதில் இது போன்ற மருத்துவ ஆய்வுகள் மிக முக்கியமானவை. மேலும் அது நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கின்றன,” என்றார்.

கோவிட் -19 க்கு எதிராக தற்காத்துக் கொள்ள, ஒரு தடுப்பு மருந்து மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பயிற்றுவிக்க முடியுமா என்பதை நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த தடுப்பு மருந்தை இங்கிலாந்திலும் அதற்கு அப்பாலும் அதிகமானவர்களுக்கு முக்கிய சோதனைகளுக்கு கொண்டு செல்ல முடியும். மேலும், ”ஆய்வின் ஆரம்ப கட்டத்தில், மேற்கு லண்டன் பகுதியில், 18 முதல் 45 வயதுடைய 15 ஆரோக்கியமான தன்னார்வ பங்கேற்பாளர்களில் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கும், தடுப்பு மருந்தின் உகந்த உபயோகிக்கும் அளவைக் கண்டுபிடிப்பதற்கும் ஆல்வாளர்கள் குழு கடுமையாக முயற்சிக்கும். முதல் பங்கேற்பாளர் தடுப்பு மருந்தின் மிகக் குறைந்த அளவைப் பெறுவார், குழுவின் அடுத்தடுத்த தன்னார்வலர்களுக்கு அளவு அதிகரிக்கப்படும்.

இந்த ஆரம்ப கட்ட சிறிய குழுவைத் தொடர்ந்து, ஒரு பெரிய அளவிலான மக்களிடம் தடுப்பு மருந்தின் உகந்த அளவை பரிசோதிக்க குழு மேலும் ஆரோக்கியமான தன்னார்வலர்களை (18-75 வயதுடையவர்கள்) நியமிக்கும். ஒருங்கிணைந்த கட்டம் I / II ஆய்வுகள் மேற்கு லண்டன் பகுதி மற்றும் கூடுதல் இடங்களில் மொத்தம் 300 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கி சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆய்வின் இக்கட்டத்தில், அனைத்து தன்னார்வலர்களும் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தைப் பெறுவார்கள் – ஒரு ஆரம்ப டோஸ் மற்றும் நான்கு வாரங்களுக்குப் பிறகு அதிகரிக்கப்பட்ட இரண்டாவது டோஸ். பல பாரம்பரிய தடுப்பு மருந்துகள் பலவீனமான/செயலிழக்கச் செய்யப்பட்ட/கொல்லப்பட்ட அல்லது ஆய்வகத்தில் மாற்றம் செய்யப்பட்ட  வைரஸ் அல்லது வைரஸின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் இம்பீரியல் தடுப்பு மருந்து ஒரு புதிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இது செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸின் மரபணு (RNA) வைப் பயன்படுத்துகிறது.

இம்மருந்து தசையில் செலுத்தப்பட்டவுடன், RNA சுயமாக தன்னைத்தானே நகலெடுத்து எண்ணிக்கையில் பெருகும். மேலும் வைரஸின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஸ்பைக் புரதத்தின் நகல்களை உருவாக்கி, மனித நோயெதிர்ப்பு செல்களுக்கு அதை அடையாளம் காட்டுகிறது. இடன் மூலம் உண்மையிலேயே கொரோனா தோற்று ஏற்படுமானால், அதை அடையாளம் கண்டு நோயெதிர்ப்பு செயல்பாடுகளை உருவாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்துகிறது.  இதனால் நாமது உடல் வைரஸை எளிதாக அடையாளம் கண்டு எதிர்காலத்தில் கோவிட் -19 க்கு எதிராக தற்காத்துக் கொள்ள முடியும்.

தடுப்பு மருந்து பணிக்குழுத் தலைவரான கேட் பிங்காம் கூறினார்: “இம்பீரியல் கல்லூரி மிக விரைவாக மனித மருத்துவ பரிசோதனை நிலைக்கு முன்னேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு மட்டுமல்லாமல், எதிர்கால தடுப்பு மருந்துகளின் வளர்ச்சிக்கும் அவர்களின் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் தொழில்நுட்பம் ஒரு உண்மையான மாறுதலாக இருக்கும். இந்த நாட்டில் உள்ள உலகின் முன்னணி வாழ்க்கை-அறிவியல் துறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். “லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் அவர்களின் மாற்று தடுப்பு மருந்தை ஆதரிப்பதன் மூலம், நாங்கள் இங்கிலாந்தின் தடுப்பு மருந்து இலாகாவை மேம்படுத்தி, வெற்றிகரமான தடுப்பு மருந்தை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளோம்.”

உலகளவில், கடந்த டிசம்பரில் சீனாவில் முதன்முதலில் இந்த வைரஸ் பதிவாகியதில் இருந்து 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பாசிடிவ் முடிவுகளுடன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4.37 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இருப்பினும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கோவிட் -19 டிராக்கரின் கூற்றுப்படி, உலகளவில் கிட்டத்தட்ட 38 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து  விரைவில் தயாராகட்டும்!!!

தமிழில்: லயா