சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்று, சொந்த மண்ணில் அவமானத்தை சந்தித்தது.

420 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டிய அந்த இந்திய அணி, 192 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கேப்டன் விராத் கோலி அதிகபட்சமாக 72 ரன்களை சேர்த்தார். ஷப்மன் கில் 50 ரன்களை எடுத்தார். ரஹானே, சுந்தர் மற்றும் நதீம் ஆகியோர் டக்அவுட் ஆனார்கள். இந்திய அணியின் வேறு எந்த வீரரும் 20 ரன்களைக்கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி திணறும் என்றும், மோசமாக தோற்கும் என்று கருத்து தெரிவித்தனர் பலரும். ஆனால், சொந்த மண்ணில் இந்தியாவை, அசால்ட்டாக வைத்து செய்துள்ளனர் இந்திய அணியினர்.