ண்டன்

டனை செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா வங்கியில் கடன் பெற்று திரும்ப தரவில்லை. அவர் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் அவர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அதனால் அவரை விசாரணைக்காக இந்தியா அழைத்து வர சிபிஐ முயன்றது.

இதை ஒட்டி அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பக் கோரி அரசு சார்பில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இங்குள்ள சிறைகள் சுகாதாரமற்றவை என காரணம் கூறி விஜய் மல்லையா தரப்பு எதிர்த்து வாதாடியது. அவரை அடைத்து வைக்க உள்ள சிறைச்சாலை குறித்த வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசால் அளிக்கபட்டது.

கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதி அளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்தது. அதை ஒட்டி அந்த பரிந்துரையை ஆராய்ந்த இங்கிலாந்து நாட்டு உள்துறை அமைச்சகம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவில் இங்கிலாந்து அமைச்சர் நேற்று கையெழுத்து இட்டுள்ளார்.

இங்கிலாந்து அமைச்சக உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா அங்குள்ள நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.