லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், ‘விஸ்டன்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஸ்டன் விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வுசெய்து வழங்கப்படுவதாகும். விஸ்டன் கிரிக்கெட் அல்மனாக் புத்தகம் ஆண்டுதோறும் வெளியிடப்படுவதையொட்டி, இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தப் புத்தகம் ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த 2020ம் ஆண்டிற்கான விருது, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்கிற்கு வழங்கப்படுகிறது. கடந்த 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான விருதுகளை வென்றிருந்தவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை கடைசியான கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆல்ரவுண்டராக இருந்த பிளின்டாப் வென்றிருந்தார் என்பது நினைவில் நிற்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.