சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்மேற்கொள்ள நிலையில், பொறியியல் தரவரிசை பட்டியல்  மற்றும் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதால், கலந்தாய்வு தேதிகளும் தள்ளிப் போவதாகதெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வுகளை நடத்தி வந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல்6 கலந்தாய்வை நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து, தமிழக தொழில்நுட்பக் கல்வி  இயக்கம் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்த உள்ளது.

பிஇ பிடெக் படிப்புகளில் சேருவதற்கு இந்தாண்டு ஒரு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித் திருந்த நிலையில், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் இன்னும் சில பேர் சான்றிதழ்களை முழுமையாக கொடுக்காத காரணத்தால் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக  வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. தர வரிசை பட்டியல் வெளியாவது தள்ளிப்போவதால், கலந்தாய்வு தேதிகளும் தள்ளிப் போவதாக  தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இதனால் 20 ம் தேதி நடக்க இருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு  வரும் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  25-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும் 26ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 27ஆம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு பொறுத்தவரையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும் என  தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.