சென்னை: பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விரைவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாணடு வகுப்புகள் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.,
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்க வாய்ப்பு இருக்காது என்று கூறியவர், பயோடெக்னலாஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார்.
நடப்பாண்டு பொறியியல் படிப்பு 69% இட ஒதுக்கீட்டின் படி கல்லுரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், தமிழகஅரசு அறிவித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் 7.5% இட ஒதுக்கீட்டின்படி 5,970 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். அவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று எச்சரித்தவர், கட்டணம் வசூலிக்கும், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3,443 கௌவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியவர், தமிழகத்தில் பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி தொடங்கும் என்றும் கூறினார்.