சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு மேலும் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.  கடந்த 10 ஆண்டுகளில் 137 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

தமமிழக மாணவர்களிடையே பொறியியல் படிப்பின்மீதான மோகம் குறைந்து வரும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டு வருகின்றன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டதாக தகவல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2011 டிசம்பர் மாதக் கணிப்பின்படி,தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை  570  ஆக இருந்தது. இதில், 520 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மற்றவை தன்னாட்சி பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் மீதான மோகம் குறைந்து வருவதால், ஏராளமான கல்லூரிகள் மாணவர் சேர்க்க்கையின்றி, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளையில் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மென்பொருள் நிறுவனம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதால், பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துள்ளது. இதனால், பல பொறியியல் கல்லூரிகள்,  கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு442 பொறியியல் கல்லூரிகளில் மணாவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், தற்போது  433  பொறியியல் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.  11 கல்லூரிகள் நடப்பாண்டு மூடப்பட்டுள்ளன.

இன்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று (ஜூலை 22) தொடங்கி  உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வி ஆண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது