சென்னை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்திலேயே நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், கவுன்சிலிங் மூலம் கல்லூரிகளை தேர்வு செய்ய விண்ணப்பம் பதிவு நாளை முதல் இணையதளத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோல இந்த ஆண்டு கவுன்சிலிங்கும் முதன்முறையாக ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்ய விரும்புபவர்கள், https://tnea.ac.in/tneaonline18/index.php என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே 30 ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை, அதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ள கல்லூரிகளின் அலுவலகங்களுக்கு சென்று தங்கள் சான்றிதழ் களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக 6 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 6 நாளில் சான்றிதழ்கள் சரிபார்க்காத மாணவர்கள் 7 வது நாள் சென்னை வந்து அண்ணா பல்கலையில் நியமிக்கப்பட்ட அலுவலகத்தில் வந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கில் 567 கல்லூரிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.