மதுரை: திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் மனுவை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக ஜாமின்மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மத்தியஅரசின் துறையான அமலாக்கத்துறையின் மதுரை கிளை அலுவலகத்தில் பணியாற்றி வரும், மண்டல துணை அதிகாரி, அங்கீத் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கீத் திவாரியிடம் லஞ்ச் ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.  இந்தநிலையில்  தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு என்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும். மேலும் அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில் தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன்  பட்டியலிட்டுள்ளார். இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

அங்கித் திவாரி தரப்பில் மூத்த  வழக்கறிஞர் ஆஜராகி,அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒன்றிய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்.எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து இரண்டு தரப்பு வாதங்களை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. இந்த நிலையில், இன்று அங்கித் தீவாரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.