சென்னை:  சட்டவிரோத பண  பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில்  இன்று அதிகாலை 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி,   அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்துவருவதாகவும், குறிப்பாக தலைமுடி ஏற்றுமதி இறக்குமதி  தொழில் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.  இவர்களுக்கு சொந்த வீடு உள்பட அலுவலகங்களில்  இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.