டெல்லி:

லைநகர் டெல்லியில் உள்ள  அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதியானதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம் கிருமி நாசினி தெளிப்புக்காக 48 மணிநேரம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

டெல்லி கான் மார்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில்தான் அமலாக்கப்பிரிவு தலைமைஅலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் முதல்தளத்தில் உள்ள அரசு துறை ஊழியர்கள் சிலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதையடுத்து, மற்ற அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், அமலாக்கத்துறையில், சிறப்பு இயக்குநர் உள்பட பலருக்கு  கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது  அறிகுறியில்லாத தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமலாக்த்துறை அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  வரும் திங்கள்கிழமை முதல் அலுவலகம் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.