சென்னை: 600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சாம்சங் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை, கிண்டி, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
அதன்படி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 1588 கோடி செலவில் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கம்ப்ரசர் உற்பத்தி ஆலையை சாம்சங் நிறுவனம் அமைக்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel