ஸ்ரீஹரிகோட்டா:

‘பி.எஸ்.எல்.வி.- சி 45′ ராக்கெட் மூலம் எமிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ராணுவத்தின் உளவுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., – சி 45 ராக்கெட்,  திட்டமிட்டபடி இன்று காலை 9.27 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.

இதற்கான கவுண்டவுன்  நேற்று காலை 6.27 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம், 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதேபோல், அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, வணிக ரீதியான 28 செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.