டெல்லி:

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு இன்று மாலை முடிவு செய்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை நேற்று உச்சநீதிமன்றம் நிராகரித்ததோடு, இதன் மீதான தீர்ப்பையும் உடனடியாக வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவித்தன.

மேலும், இதற்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு இன்று மாலை முடிவு செய்தது. இச்சட்டம் தொடர்பான வரைவு மத்திய சட்டத்துறை அமைச்சகத்தக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.