திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விமுடுத்து ஈமெயில் கடிதம் வந்துள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், சமீப காலமாக இமெயில் மூலம் பள்ளி, கல்லூரி உள்பட முக்கிய ஸ்தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற மிரட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதால்,. அதை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகிறது.
இருந்தாலும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்றிது. இதற்கு முன்பு இரு முறை இது போன்ற மிரட்டல் கடிதம் வந்தது மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 3வது முறையாக திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல் உள்பட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 7 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மேலும்இ, திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் செயல்படும் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளிக்கும் இன்று காலை இதே போன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து வயனூர் பகுதியில் உள்ள அமிர்தானந்தா பள்ளிக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சுவேதா என்ற பெயரில் வந்துள்ள இந்த இமெயில் கடிதத்தில் உங்கள் கல்லூரியில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி, கல்லூரி நிர்வாகம், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. தற்போது பள்ளிகள் காலாண்டு விடுமுறையில் இருக்கும் நிலையில், கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் உடனே வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
தகவல் அறிந்த மாநகர காவல் துறையினர் திருச்சி ஜோசப் கல்லூரி, சமது பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளில் இன்று காலையிலிருந்து வெடிகுண்டு கண்டறியும் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து யார் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் புரளி கலப்புவோர் கண்டுகொண்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.