சென்னை; மக்கள் கூட்டம் கூடும் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று முற்பகல் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால், அனைவரும் அதிர்ச்சி  அடைந்த நிலையில், ரயில்வே போலீசார்  சுறுசுறுப்பாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினசரி பல லட்சம் போய் வந்துபோய்கொண்டிருக்கின்றனர்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மொத்தம் 250க்கும் மேற்பட்ட  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி  குறைந்த பட்சம்  200 ரயில்கள் இயக்கப்படுகின்றன, அவற்றில் 100 உள்ளூர் ரயில்களும் அடங்கும். இதற்காக 12 நடைபெடைகள் உள்ளன. மேலம் சபர்பன் ரயில் நிலையமும் தனியாக உள்ளது.

இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள   பார்சல் அலுவலகத்திற்கு  இன்று வந்த இ-மெயிலில்,   வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர்,  ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் மேலும்,  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.