உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார். அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரெஞ்சு சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை உயர் பதவியில் இருந்து அகற்றினார். திரு மஸ்க் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரண்டாவது இடத்தில் இருந்தார். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, டெஸ்லா பங்குகளின் எழுச்சி எலோன் மஸ்க்கை மீண்டும் பில்லியனர்கள் குறியீட்டின் மேல் நிலைக்கு அனுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தலைமையில் Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடத்தில் இருந்தார் எலான் மஸ்க். பின்னர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததால் உலக பணக்காரர்கள் பட்டியலில் சற்று சறுக்கி வந்தார். இதனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடம் வகித்து வந்தார். இந்த நிலையில், தற்போது, எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலராக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 36% அதிகரித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கிற்கு 13.4% பங்கு இருக்கிறது. இந்த ஆண்டில் டெஸ்லா பங்கு சுமார் 10% அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை எலான் மஸ்க் சொத்து மதிப்பு 50.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது இதுவே எலான் மஸ்க் சொத்து மதிப்பு மீண்டும் உயர காரணமாக அமைந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலராக உள்ளது. மூன்றாம் இடத்தில் ஜெப் பெசோஸ் (117 பில்லியன் டாலர்), நான்காம் இடத்தில் பில் கேட்ஸ் (114 பில்லியன் டாலர்), ஐந்தாம் இடத்தில் வாரன் பஃபெட் (106 பில்லியன் டாலர்) ஆகியோர் இருக்கின்றனர்.
அதேவேளையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதைவிட பல மடங்கு வேகத்தில் அதானி நிறுவனம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. அமெரிக்க நிறுவனமாக ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து வந்த அதானி தற்போது 30வது இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு உள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் சுமார் 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து வந்த கவுதாம் அதானி 39.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 37வது பெரும் பணக்காரராக உள்ளார், இதேபோல் போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் இன்டெக்ஸை பொருத்த வரையில் 33.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 37வது இடத்தில் உள்ளார்.