தானே:

மும்பையில் உள்ள தானே பகுதியில் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த பள்ளிகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பள்ளியில் படித்து மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அங்கீகாரமற்ற பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு  அறிவித்த நிலையிலும், 11 பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அங்கீகாரமற்ற முறையில் பல பள்ளிகள் இயங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து மகராஷ்டிரா அரசு, அந்த பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமையாசிரியருக்கு அறிவிப்பு கொடுத்துள்ளது.

“மும்பை மற்றும்  திவா பகுதியில்  11 பள்ளிகள் இயங்க தடை விதித்து, மகாராஷ்டிரா கல்வித்துறை மற்றும் தானே நகராட்சி கழகத்தின் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி இந்த பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி வருவதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தானே காவல்துறையும் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக  அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.