தொடங்கியது மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்! மின் சப்ளை பாதிக்குமா?

Must read

சென்னை :

மிழக மின்வாரிய ஊரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் மின்சார பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்சார வாரியத்தில் உள்ள 10 தொழிற் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து,  நேற்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேச்சு வார்த்தை நடைபெறாத நிலையில், இன்று முதல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று  தொழிற்சங்கங்கள் அறிவித்தது.

அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் மின்சார வாரிய ஊழியர்களின்  வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக  பொதுமக்கள் மின்சார கட்டணம் கட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் மின் சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article